×

வினேஷ் போகத் மேல்முறையீட்டு மனு மீது நாளை மறுநாள் இரவு 9.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது நீதிமன்றம்

வினேஷ் போகத் மேல்முறையீட்டு மனு மீது நாளை மறுநாள் இரவு 9.30 மணிக்கு விளையாட்டுகளுக்கான சமரச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் இறுதிப்போட்டியில் பங்கேற்க வினேஷ் போகத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து தனக்கு வெள்ளி வழங்கக் கோரி வினேஷ் போகத் நீதிமன்றத்தை நாடினார்.

ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ ஃபிரீஸ்டைல் பிரிவு பைனலில் பங்கேற்க இருந்த நிலையில், உடல் எடை 100 கிராம் அதிகமாக இருந்ததாக இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். சரியான எடையுடன் களமிறங்கி ரவுண்ட் ஆப் 16, காலிறுதி, அரையிறுதி என தொடர்ச்சியாக 3 வெற்றிகளை அவர் வசப்படுத்தி இருந்த நிலையில், தகுதிநீக்கம் செய்யப்பட்டது சர்ச்சையை கிளப்பியது.

இந்த முடிவை எதிர்த்து வினேஷ் சார்பில் இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் மேல்முறையீடு செய்தனர். இது தொடர்பாக விளையாட்டு போட்டிகளுக்கான நடுவர் நீதிமன்றம் நேற்று விசாரணை நடத்தியது. 3 மணி நேரத்துக்கும் மேலாக மத்தியஸ்தர் அனபெல் பென்னெட் நடத்திய விசாரணை நிறைவடைந்ததையடுத்து நாளை மறுநாள் இரவு 9.30 மணிக்கு விளையாட்டுகளுக்கான சமரச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

The post வினேஷ் போகத் மேல்முறையீட்டு மனு மீது நாளை மறுநாள் இரவு 9.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : VINESH BOGAT ,Conciliation Court for Games ,Vinesh Bhogat ,Vinesh Bogath ,
× RELATED அரியான சட்டமன்றத் தேர்தலில்...