×

நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

நாகை: நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர். கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர். மீனவர்களை தாக்கி ரூ.4 லட்சம் மதிப்புள்ள வலைகள், ஜிபிஎஸ் கருவி போன்றவற்றை பறித்துச் சென்றனர். கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் சிவசங்கர், செல்வா, ராஜகோபால், தனசேகரன் ஆகியோர் காயமடைந்தனர். இரும்புக் கம்பி உள்ளிட்டவற்றால் தாக்கப்பட்டதில் காயமடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Naga Nagai ,Naga ,SEA NEAR KODIAKAR ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கி சூடு