ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 76 கிலோ ஃபிரீஸ்டைல் பிரிவு ரவுண்ட் ஆப் 16ல் நேற்று களமிறங்கிய இந்திய வீராங்கனை ரீத்திகா ஹூடா 12-2 என்ற புள்ளிக் கணக்கில் ஹங்கேரியின் பெர்னாடெட் நேகியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். அடுத்து காலிறுதியில் நம்பர் 1 வீராங்கனை அய்பெரி மெடெட் கிஸியுடன் (கிர்கிஸ்தான்) மோதினார்.
மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இபோட்டியில் இரு வீராங்கனைகளும் சளைக்காமல் போராடியதால் 1-1 என்ற புள்ளிக் கணக்கில் சமநிலை வகித்தனர். எனினும், விதிகளின்படி கடைசி டெக்னிகல் பாயின்ட்டை பெற்ற அய்பெரி மெடெட் வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால், சிறப்பாக விளையாடியும் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை ரீத்திகா துரதிர்ஷ்டவசமாக பறிகொடுத்தார்.
The post காலிறுதியில் தோற்றார் ரீத்திகா ஹூடா appeared first on Dinakaran.