ஏராளமானோரின் கனவுகளை சிதைத்த நிலச்சரிவு: பிரதமர் மோடி

வயநாடு: வயநாட்டில் நிலச்சரிவு பாதிப்புகளை ஆய்வு செய்த பின் ஆய்வுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது; வயநாடு நிலச்சரிவு ஏராளமானோரின் கனவுகளை சிதைத்துவிட்டது. பேரிடர் மீட்புப்படை, ராணுவம், மாநில அரசு, தன்னார்வலர்கள் என அனைத்து தரப்பினரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். வயநாடு பேரிடர் சாதாரணமானது அல்ல; பாதிக்கப்பட்டவர்களை நிவாரண முகாம்களில் சந்தித்தேன். வயநாட்டில் அனைத்து தரப்பினரும் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். நிலச்சரிவு பாதிப்பை தொடர்ந்து கேரள அரசுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டன. நிலச்சரிவு ஏற்பட்டது முதல் ஒவ்வொரு பணிகளையும் கண்காணித்து வந்தேன் என்று கூறினார்.

The post ஏராளமானோரின் கனவுகளை சிதைத்த நிலச்சரிவு: பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Related Stories: