திருவள்ளூர்: சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவர் நிரபராதி என்று திரு வள்ளூர் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது.சின்னத்திரை நடிகை சித்ரா. இவர் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 9ம்தேதி தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். இந்தநிலையில், தற்கொலை வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இதையடுத்து சித்ரா தற்கொலை வழக்கில் மர்மம் இருப்பதாக கூறி, திருவள்ளூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவந்தது. வழக்கு விசாரணைக்கு ேஹம்நாத் ஆஜராகி வந்தார்.இந்தநிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி ரேவதி வழக்கை விசாரித்து இன்று தீர்ப்பு அளித்தார். அவர் அளித்த தீர்ப்பில், ‘’ஹேம்நாத் மீது குற்றம் நிரூபிக்கப்படவில்லை. எனவே, அவரை நிரபராதி என்று கூறி விடுவிக்கிறேன்’ என்றார்.
The post நடிகை சித்ரா தற்கொலை வழக்கு கணவர் ஹேம்நாத் விடுவிப்பு :திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.