- தேனி மாவட்டம்
- அமைச்சர் I. பெரியசாமி
- பெருமிதம் ஆண்டிப்பட்டி
- அமைச்சர்
- I. பெரியசாமி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- எம். ஸ்டால்
*அமைச்சர் ஐ.பெரியசாமி பெருமிதம்
ஆண்டிபட்டி : தேனி மாவட்டத்தில் 38 கல்லூரிகளில் பயிலும் 3,292 மாணவர்கள் தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் பயனடைவர் என அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை கோவையில் நேற்று தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா முன்னிலையில் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் தேனி தெற்கு மாவட்ட செயலாளரும், கம்பம் சட்டமன்ற உறுப்பினருமான ராமகிருஷ்ணன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியைப் பெருக்குவதிலும், இளைஞர்கள் உயர்கல்வி பெறும் வாய்ப்புகளை உயர்த்துவதிலும் மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறார்கள். எவ்வித வேறுபாடுமின்றி அனைவருக்கும் கல்வி வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயின்று உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள்.
இத்திட்டத்தின் மூலம் வழக்கமாகக் கல்லூரிகளில் சேரும் மாணவிகளைவிடக் கூடுதலாகக் கல்லூரிகளில் சேர்ந்து பயன்பெற்றுள்ளனர். மாணவிகளின் நலன் மட்டுமல்லாது, மாணவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு, அரசுப் பள்ளிகளில் பயின்ற, மாணவர்களைச் சாதனையாளர்களாக உருவாக்கிடவும், அரசுப் பள்ளி மாணவரின் உயர்கல்விச் சேர்க்கையை உயர்த்திடவும், பள்ளிக்கல்வி முடித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தை தற்பொழுது தொடங்கி வைத்துள்ளார்கள்.
இந்திய அளவில் கல்லூரிகளில் சேர்ந்து பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் மிக அதிகமாகும். தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை இந்திய அளவில் மேலும் உயர்த்துவதற்காக இதுபோன்ற கல்வி சார்ந்த பல திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்ப் புதல்வன் திட்டம் பெற்றோரின் பொருளாதாரச் சுமையை குறைத்து, மாணவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்த்து, கல்வி கற்கும் ஆர்வத்தைப் பெருக்குகிறது. இத்தொகை உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள். பொது அறிவு நூல்கள் உள்ளிட்ட பிற இதழ்களை வாங்கி படிப்பதற்கு உதவியாக இருக்கும். கல்வியே என்றும் அழியாத செல்வமாக கருதப்படுகிறது.
தொழிலுக்கு வழிகாட்டி வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதற்கு உதவும் கருவியாக விளங்குகிறது. எனவே மாணவர்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி நன்கு கல்வி கற்று உயர்ந்த நிலையை அடைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இத்திட்டத்தின் மூலம் தேனி மாவட்டத்தில் 38 கல்லூரிகளில் பயிலும் 3,292 மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1000 பெற்று பயனடைவார்கள். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதாஹனீப், தேனி-அல்லிநகரம் நகர்மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர்கள் தேனி- சக்கரவர்த்தி பெரியகுளம்-தங்கவேல், மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளாதேவி, ஆண்டிபட்டி திமுக கிழக்கு ராஜாராம், பேரூர் செயலாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post தேனி மாவட்டத்தில் 38 கல்லூரிகளில் பயிலும் 3,292 மாணவர்கள் தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் பயனடைவர் appeared first on Dinakaran.