- மோடி
- ராகுல் காந்தி
- பிற்பகல்
- ஹேமந்த் சோரன் கே.
- ஸ்டாலின்
- ராய்ப்பூர்
- முதல் அமைச்சர்
- ஹேமந்த் சோரன்
- ஜார்கண்ட் மாநிலம்
- கே. ஸ்டாலின்
- பிரதமர் மோடி
- தின மலர்
ராய்ப்பூர் : ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பல தடைகள் வந்தாலும் மக்களின் உரிமைக்கு போராடும் உத்வேகத்தை அசைக்க முடியாது என நிரூபித்தவர் ஹேமந்த் சோரன். குறையாத வலிமையுடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து முன்னேற ஹேமந்த் சோரனுக்கு வாழ்த்துகள்,”என்று தெரிவித்துள்ளார். அதே போல் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில்,”ஜார்க்கண்ட் முதல்வர் ஸ்ரீ ஹேமந்த் சோரன் ஜிக்கு அவரது பிறந்தநாளில் மனமார்ந்த வாழ்த்துக்களும் நல்வாழ்த்துக்களும்.நாட்டின் ஏழைகள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரின் உரிமைகளுக்கான போராட்டத்தில், அவர்களுக்கு இழைக்கப்படும் ஒவ்வொரு அநீதிக்கும் எதிராக, இந்தியா வலுவாகப் போராடும், ஒன்றாக நாம் வெற்றி பெறுவோம்.”இவ்வாறு தெரிவித்தார்.
இந்திய பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,”ஜார்க்கண்ட் முதல்வர் ஸ்ரீ ஹேமந்த் சோரன் ஜி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரது நீண்ட ஆயுளுக்கும், அற்புதமான ஆரோக்கியத்திற்கும் பிரார்த்திக்கிறேன்,”இவ்வாறு தெரிவித்தார். நில மற்றும் பண மோசடி குற்றச்சாட்டின்பேரில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத் துறையால் கடந்த ஜனவரி 31-ம் தேதி கைது செய்யப்பட்டார். ஆனால், அதற்கு முன்பாகவே அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். சுமார் ஐந்து மாதங்களுக்குப் பிறகு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் சோரனுக்கு ஜாமீன் வழங்கியதையடுத்து ஜூன் 28-ம் தேதி பிர்சா முண்டா சிறையில் இருந்து சோரன் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, ஜார்க்கண்ட் முதல்வராக சோரன் மூன்றாவது முறையாக பதவியேற்ற சில நாட்களுக்குப் பிறகு ஜூலை 8-ம் தேதி மாநில சட்டப்பேரவையின் சிறப்பு அமர்வின்போது நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post குறையாத வலிமையுடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து முன்னேறுங்கள் : ஹேமந்த் சோரனுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் வாழ்த்து!! appeared first on Dinakaran.