×

பயணிகள் வசதிக்காக 6 பெட்டிகள் கொண்ட 28 மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு ஒப்புதல்

டெல்லி: முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பயணிகள் வசதிக்காக 6 பெட்டிகள் கொண்ட 28 மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மெட்ரோ ரயில்களில் தினசரி 3 லட்சம் முதல் 3.50 லட்சம் பேர் வரை பயணிக்கின்றனர். பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால், மெட்ரோ ரயில்களின் எண்ணிக்கையை உயர்த்த கோரிக்கை எழுந்துள்ளது. 6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்ய கடந்தாண்டு மெட்ரோ ரயில் நிறுவனம் கருத்துரு அனுப்பியது.

கருத்துருக்கு தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் ஒப்புதல் அளித்த பின் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் 6 பெட்டிகள் கொண்ட 28 மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்ய ஒன்றிய நிதி மற்றும் பொருளாதார விவகாரத் துறை ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.2,820 கோடி மதிப்பில் 6 பெட்டிகள் கொண்ட 28 ரயில்கள் கொள்முதல் செய்ய கடந்த ஜூன் மாதம் நிதி ஆயோக் ஒப்புதல் அளித்துள்ளது. சென்னையில் முதற்கட்டமாக விமான நிலையம்-விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

பரங்கிமலை – சென்ட்ரல் ரயில் நிலையம் வரையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. மொத்தம் 54 கி.மீ. தொலைவுக்கு தலா 4 பெட்டிகள் கொண்ட 45 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

The post பயணிகள் வசதிக்காக 6 பெட்டிகள் கொண்ட 28 மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Union Government ,Delhi ,
× RELATED கனிமவள தீர்ப்பு: உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு மேல்முறையீடு