- இராசிபுரம்
- வேனந்தூர் ஒன்றியம்
- நாச்சிப்பட்டி, ஓ.
- சௌதாபுரம்
- பழந்தினிப்பட்டி
- உமா
- நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி
- தின மலர்
ராசிபுரம், ஆக.10: ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெண்ணந்தூர் ஒன்றியம், நாச்சிப்பட்டி, ஓ.சவுதாபுரம், பழந்தின்னிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் உமா தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., முன்னிலை வகித்தார். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்று, ரூ.66.24 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.
வெண்ணந்தூர் ஒன்றியம், ஓ.சவுதாபுரம் ஊராட்சியில், ரூ.13.57 லட்சத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம், ராசாபாளையம் கிராமத்தில் ரூ.18.95 லட்சத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள தானிய கிடங்கு, பழந்தின்னிப்பட்டி ஊராட்சியில் ரூ.20.15 லட்சத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள தானிய கிடங்கு, நாச்சிப்பட்டி ஊராட்சியில் ரூ.13.57 லட்சம் புதியதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் என மொத்தம் ரூ.66.24 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 புதிய கட்டிடங்களை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post ரூ.66.24 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் திறப்பு appeared first on Dinakaran.