×

மூச்சுத்திணறலால் 5 வயது சிறுமி பலி

 

தேன்கனிக்கோட்டை, ஆக.10: தேன்கனிக்கோட்டை தாலுகா, பாலதொட்டனப்பள்ளி அருகேயுள்ள மேடுமுத்துகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகளும், 5 வயதில் இரட்டை பெண் குழந்தைகளும் உள்ளனர்.
இளைய மகள் சன்விதா(5) பாலதொட்டனப்பள்ளி அரசு பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தாள்.

கடந்த 8ம் தேதி அதிகாலை, சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவரது பெற்றோர்கள், உடனடியாக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post மூச்சுத்திணறலால் 5 வயது சிறுமி பலி appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,Medumuthukottai ,Balathottanampalli, Dhenkanikottai ,Thanalakshmi ,Sanvita ,Balathottanampally ,
× RELATED தேன்கனிக்கோட்டை அருகே பரபரப்பு...