×

கட்டிட ஒப்பந்ததாரரிடம் ரூ.9.20 லட்சம் நூதன மோசடி

 

கிருஷ்ணகிரி, ஆக.10: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஜெகதேவி ரோடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவர் கட்டிட ஒப்பந்ததாரராக உள்ளார். இவரது செல்போனுக்கு கடந்த ஜூலை மாதம் 15ம் தேதி, போன் ஒன்று வந்தது. அதில், பேசிய நபர் குறைந்த விலைக்கு இரும்பு கம்பிகளை விற்பனைக்கு தருவதாகவும், கம்பிகள் வேண்டும் என்றால், முன்னதாகவே அதற்கான முழு தொகையையும் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனை நம்பி அவர் கொடுத்த வங்கி கணக்கிற்கு, ராமசாமி ரூ.9 லட்சத்து 20ஆயிரம் அனுப்பி வைத்தார். ஆனால், அவர் கூறியபடி இரும்பு கம்பிகள் எதையும் அனுப்பி வைக்கவில்லை. அவரது செல்போன் நம்பரை தொடர்பு கொண்ட போது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.  இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ராமசாமி, நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கட்டிட ஒப்பந்ததாரரிடம் ரூ.9.20 லட்சம் நூதன மோசடி appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Ramasamy ,Parkur Jagadevi Road ,Krishnagiri district ,
× RELATED கிருஷ்ணகிரி பள்ளியில் போலி என்.சி.சி...