- புக்லோர் தீயணைப்பு நிலையம்
- Velayuthampalayam
- கரூர் மாவட்டம் புகளூர் தீயணைப்பு நிலையம்
- திருக்கடதுரை
- கரூர் மாவட்டம் தீ
- துறை அதிகாரி
- வடிவேல்
வேலாயுதம்பாளையம், ஆக. 10: கரூர் மாவட்டம் புகளூர் தீயணைப்பு நிலையம் திருக்காடுதுறை அருகே செயல்பட்டு வருகிறது. இந்த தீயணைப்பு நிலையத்தில் கரூர் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் வடிவேல் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தீயணைப்பு வாகனம், தீயணைப்பதற்கு பயன்படும் தளவாடங்கள், தண்ணீர் குழாய், செயற்கை கருவிகள் மற்றும் பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது காவிரி ஆற்றில் தண்ணீரில் சிக்கிக் கொண்டவர்களை மீட்பதற்காக பயன்படுத்தப்படும் ரப்பர் படகு, காற்று அடித்த டியூப் ,சேப்டி ஜாக்கெட் உள்ளிட்ட உபகரணங்களையும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் தீ விபத்து, மீட்பு பணிகள் மற்றும் துணை அழைப்புகள் குறித்த விவரங்கள் குறித்த பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து தீயணைப்பு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். ஆய்வின் போது நிலைய அலுவலர் சரவணன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனிருந்தனர்.
The post புகளூர் தீயணைப்பு நிலையத்தில் துறை அலுவலர் நேரடி ஆய்வு appeared first on Dinakaran.