கரூர், ஆக. 10: கோரிக்கை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய குற்றவியல் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. கரூர் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நாட்ராயன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ரத்தினம், சண்முகம், மோகன்குமார், ராஜேந்திரன், குப்புசாமி உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு, இந்த கட்சியினர் ஒன்று கூடிய நிலையில், அதற்கு போலீசார் அனுமதி தராத காரணத்தினால், ஒன்றிய அரசு அமல்படுத்தி வரும் குற்றவியல் சட்டங்களை கண்டித்தும், ஜனநாயக சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு கலைந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றவியல் சட்ட நகல் எரிப்பு போராட்டம் appeared first on Dinakaran.