- அமைச்சர்
- அன்பில் மகேஷ்
- ஒருங்கிணைந்த கல்வி அலுவலகம்
- கரூர்
- பள்ளி கல்வி அமைச்சர்
- அன்பில் மஹேஸ்போய்யாமோஷி
- ஒருங்கிணைந்த கல்வித்துறை
- கரூர் மாவட்டம்
கரூர், ஆக. 10: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த கல்வித்துறை அலுவலக வளாகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜியின் கரூர் தொகுதியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த கல்வி வளாகத்தில் விரிவான ஆய்வு மேற்கொண்டு, பணியாளர்கள் தேவை, அலுவலர்களுக்கான அடிப்படை வசதிகள் போன்றவை குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகம்மாள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.
The post ஒருங்கிணைந்த கல்வித்துறை அலுவலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு appeared first on Dinakaran.