×

வாலிபரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது

திருச்சி, ஆக.10: திருச்சியில் முன்விரோதம் காரணமாக டிரைவரை அரிவாளால் வெட்டிய 2 வாலிபர்களை பொன்மலை போலீசார் கைது செய்தனர். திருச்சி பொன்மலைப்பட்டி மலையடிவாரம் பகுதியை சேர்ந்தவர் சரத் (22), டிரைவரான இவர் கடந்த மே மாதம் அப்பகுதியில் நடந்த திருவிழாவின்போது அப்பகுதியை சேர்ந்த சிலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதில் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று அப்பகுதியில் நின்று கொண்டிருந்த டிரைவர் சரத்தை 2 பேர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் காயமடைந்த சரத் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பொன்மலை காவல்நிலையத்தில் சரத் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிந்து பொன்மலைப்பட்டி மலைஅடிவாரம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (32) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் (24) ஆகிய 2 பேரை பொன்மலை போலீசார் கைது செய்தனர்.

The post வாலிபரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Trichy ,Ponmalai police ,Sarath ,Tiruchi Ponmalaipatti Malayadivaram ,
× RELATED திருச்சி ஸ்ரீரங்கத்தில் கழிவறை...