×

குட்கா விற்ற கடைகளுக்கு ரூ.24 ஆயிரம் அபராதம்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் கடைகளில் வைத்து குட்கா பொருட்களை விற்பனை செய்த 7 கடைகளுக்கு ரூ.24 ஆயிரம் அபராதம் விதித்து, வசூலிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை செய்ய அரசு தடை விதித்துள்ளது. ஆனாலும், தடையை மீறி அதிக லாபம் கிடைக்கும் என்ற நோக்கில் பெரும்பாலான கடைகளில் அரசால் தடை செய்யபட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். ந்நிலையில், ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக வந்த புகாரின்பேரில், ஸ்ரீபெரும்புதுார் மருத்துவ ஆய்வாளர் குழு நேற்று ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி பகுதிகளில் உள்ள 20க்கும் மேற்பட்ட கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.இதில், தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், கூல்லிப் உள்ளிட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 7 கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் விதம் மொத்தம் ரூ.24 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், குட்கா பொருட்களின் தீமைகள் குறித்த எடுத்துரைத்து, இனிவரும் காலங்களில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கை விடுத்து சென்றனர்.

The post குட்கா விற்ற கடைகளுக்கு ரூ.24 ஆயிரம் அபராதம் appeared first on Dinakaran.

Tags : Gutka ,Sriprahumutur ,Tamil Nadu ,
× RELATED காரில் கடத்திய குட்கா பறிமுதல்: 3 பேர் கைது