×

அம்மா உணவகம், கோயிலில் திருட்டு

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலம், 7வது வார்டு, ராமசாமி நகரில் அம்மா உணவகம் உள்ளது. நேற்று காலை இந்த உணவகத்தை திறக்க ஊழியர்கள் வந்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த காஸ் சிலிண்டர், மின்விசிறி மற்றும் சமையல் எண்ணெய், துவரம் பருப்பு போன்ற பொருட்கள் கொள்ளை போனது தெரிந்தது. இதுகுறித்து அம்மா உணவக ஊழியர் மகேஸ்வரி, சாத்தாங்காடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுதாகர் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகிறார். இதேபோல், அம்மா உணவகம் அருகில் உள்ள விநாயகர் கோயிலிலும் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. இதுகுறித்தும் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post அம்மா உணவகம், கோயிலில் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Mom ,Thiruvotiyur ,Mother Restaurant ,Thiruvotiyur Zone, 7th Ward, Ramasamy City ,
× RELATED சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது போலீசில் மேலும் ஒரு புகார்..!!