×

மின்சாரம் தாக்கி யானை பலி: கூடலூர் விவசாயி கைது

கூடலூர்,ஆக.10: கூடலூர் வட்டம்  மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட வட வயல் கிராமத்தில் பாலகிருஷ்ணன்(61) என்பவருக்கு சொந்தமான விளைநிலத்தில் கடந்த 7ம் தேதி சுமார் 13 வயதான ஆண் யானை மர்மமான முறைியல் உயிரிழந்தது. பாலகிருஷ்ணனின் வயலில் பயிரிடப்பட்டிருந்த வாழைகளை சாப்பிட வந்த யானையின் முன்னங்கால்கள் இரண்டும் சேற்றில் சிக்கிய நிலையில்,யானை இறந்து கிடந்த பகுதியில் யானையின் தாடையின் கீழ் பகுதியில் விளை நிலங்களுக்கு மின்வேலி அமைக்கும் கம்பி ஒன்றும் சென்றதால்,யானை மின்சாரம் தாக்கி இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

யானையின் உடல் உடற்கூராய்வுக்கு பின்னர் யானை மின்சாரம் தாக்கி இறந்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபரின் வீட்டில் இருந்து மின்சார சாதனங்களை கைப்பற்றி நிலத்தின் உரிமையாளரை வனத்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று பாலகிருஷ்ணன் வனத்துறை அலுவலகத்தில் சரணடைந்தார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post மின்சாரம் தாக்கி யானை பலி: கூடலூர் விவசாயி கைது appeared first on Dinakaran.

Tags : Kudalur ,Balakrishnan ,Vada Wayal village ,Madurai Panchayat ,Dinakaran ,
× RELATED 2வது திருமணம் செய்து உதாசீனம்: கணவர் வீடு முன் குழந்தைகளுடன் மனைவி தர்ணா