×

யானை தாக்கி வேட்டை தடுப்பு காவலர் பலி?

சத்தியமங்கலம், ஆக.10: நீலகிரி மாவட்டம் தெங்குமரஹாடா ஊராட்சிக்கு உட்பட்ட கல்லாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் (49). இவர் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் விளாமுண்டி வனச்சரகத்தில் வேட்டை தடுப்பு காவலராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது காட்டு யானை தாக்கி தங்கராஜ் உயிரிழந்ததாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இருப்பினும் நீலகிரி மாவட்டம் சோலூர் மட்டம் போலீசார் தங்கராஜ் யானை தாக்கி உயிரிழந்தாரா? என்பது குறித்து சந்தேகம் இருப்பதால் பிரேத பரிசோதனைக்கு பிறகு தங்கராஜ் உயிரிழந்ததற்கான காரணம் தெரிய வரும் என தெரிவித்துள்ளனர்.

The post யானை தாக்கி வேட்டை தடுப்பு காவலர் பலி? appeared first on Dinakaran.

Tags : Sathyamangalam ,Thangaraj ,Kallampalayam ,Thengumarahada ,Nilgiri district ,Tiger Reserve ,Vilamundi Forest ,Dinakaran ,
× RELATED தாளவாடி மலைப்பகுதியில் காரை...