×

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வலியுறுத்தல்

கூடலூர்,ஆக.10: கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் சோதனை அடிப்படையில் 44 வட்டங்களில் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் மற்றும் பந்தலூர் இரு வட்டங்களில் அடங்கும் பகுதியில் மக்கள் பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்க கேட்கப்பட்டது.

கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க முழு சம்மதம் தெரிவித்ததோடு அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் தரமான ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். கூட்டத்தில் கூடலூர் குடிமை பொருள் தனி வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி, பந்தலூர் வட்ட வழங்கல் அலுவலர் பொன்னரசு,கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா,கூடலூர் பந்தலூர் நகராட்சி தலைவர்கள் பரிமளா, சிவகாமி, பேரூராட்சி தலைவர்கள் சித்ராதேவி, வள்ளி,ஊராட்சி தலைவர்கள் சுனில் டெர்மிளா மற்றும் ரேசன் கடை பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Kudalur ,Protection Officer ,Ravichandran ,Revenue ,Commissioner ,Senthilkumar ,Tamil Nadu ,
× RELATED 2வது திருமணம் செய்து உதாசீனம்: கணவர் வீடு முன் குழந்தைகளுடன் மனைவி தர்ணா