- பாரதியார் பல்கலைக்கழகம்
- முதல் அமைச்சர்
- கோயம்புத்தூர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- எம். ஸ்டால்
- உயிரியல் மற்றும் சமூக அறிவியல் துறை
- அரசு கலைக் கல்லூரி
கோவை, ஆக. 10: கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.41.57 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள உயிரி அறிவியல் மற்றும் சமூக அறிவியல் துறை கட்டடங்களை கோவை அரசு கலைக்கல்லூரியில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சியின் மூலம் நேற்று திறந்துவைத்தார். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உயிரி அறிவியல் துறை மற்றும் சமூக அறிவியல் துறைகளுக்காக தலா 90,210 சதுரடி பரப்பளவில் மொத்தம் ரூ.41 கோடியே 57 லட்சத்து 81 ஆயிரம் செலவில் தரைத்தளம் மற்றும் முதல் தளம் கொண்ட ஆறு கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது.
இதில், தாவரவியல், ஆடை வடிவமைப்பு துறை, இளநிலை அறிவியல் கலப்பு பாடத்திட்டத் துறை, வணிகவியல் துறை, சமூகவியல் துறை, உளவியல் துறை, தொழில்நுட்பக் கல்வியியல் துறை, சமூகவியல் மற்றும் மக்கள் தொகை ஆய்வுகள் துறை ஆகிய துறைகளுக்கான வகுப்பறைகள், ஆய்வகங்கள், கூட்ட அரங்குகள், நூலகங்கள், அலுவலக அறைகள், துறை தலைவர் அறைகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை அரசு கலைக்கல்லூரியில் இருந்து காணொலி காட்சியின் மூலம் நேற்று திறந்து வைத்தார்.
The post பாரதியார் பல்கலையில் ரூ.41.57 கோடியில் கட்டிடம்; முதல்வர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.