×

மாநகர போலீஸ் துணை கமிஷனர் இடமாற்றம்

கோவை, ஆக. 10: கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றி வந்தவர் ரோஹித் நாதன் ராஜகோபால். இவருக்கு பதிலாக கடலூர் மாவட்ட தலைமையகத்தில் கூடுதல் காவல் கண்பாணிப்பாளராக பணியாற்றிய அசோக்குமார் பதவி உயர்வு பெற்று கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் பதவி உயர்வு பெற்று சென்னை மத்திய பகுதி ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்ட தலைமையக கூடுதல் காவல் கண்காளிப்பாளராக பணியாற்றிய முத்துக்குமார் பதவி உயர்வு பெற்று சென்னை புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

The post மாநகர போலீஸ் துணை கமிஷனர் இடமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Rohit Nathan Rajagopal ,Coimbatore Traffic Police ,Ashokumar ,Cuddalore ,Coimbatore Metropolitan Transport ,Dinakaran ,
× RELATED விபத்தை தடுக்க தேவையான நடவடிக்கை...