×

கோபி அருகே 3 பவுன் நகை திருடிய தொழிலாளி கைது

கோபி, ஆக.10: கோபி அருகே உள்ள மொடச்சூர் ஊராட்சிக்குட்பட்ட பச்சமலையை சேர்ந்தவர் பச்சியப்பன் (86). கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான ஒரு வீட்டில் தாளவாடி அருகே உள்ள திகினாரையை சேர்ந்த ஒட்டுகல நாய்க்கர் மகன் மஞ்சு (28) என்பவர், வாடகைக்கு குடியிருந்து கரும்பு வெட்டும் வேலைக்கு சென்று வந்தார்.

இந்நிலையில் கடந்த மாதம் பச்சியப்பன் வெளியே சென்ற பிறகு வீட்டிற்குள் புகுந்த மஞ்சு பீரோவை திறந்து உள்ளே இருந்த 3 பவுன் நகையை திருடிச்சென்றுள்ளார். இதுகுறித்து பச்சியப்பன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த கோபி போலீசார், மஞ்சுவை கைது செய்து கோபியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post கோபி அருகே 3 பவுன் நகை திருடிய தொழிலாளி கைது appeared first on Dinakaran.

Tags : Kobe ,Kobi ,Pachiyappan ,Modachur Uratchi ,Manju ,Tiginara ,Talawadi ,
× RELATED பயிற்சி நிறைவு பெற்ற 10 ஐஏஎஸ்...