×

மாநிலங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் வகையில் பேரிடர் மேலாண்மை சட்டத்தில் திருத்தம் கோரி மசோதா தாக்கல்: திமுக எம்பி வில்சன் அறிமுகம்

புதுடெல்லி: பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ல் திருத்தம் செய்ய கோரி திமுக எம்பி பி.வில்சன் மாநிலங்களவையில் தனி நபர் மசோதா அறிமுகம் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் செயல்படுகிறது. அதில்,பிரதமரும் அவரால் நியமிக்கப்படுவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். நாட்டில் பேரிடர்கள் நிகழும்போது,மக்களுக்கு நிவாரண உதவிகள் அளிக்க, ஒன்றிய அரசிடம் மாநில அரசுகள் கோரிக்கை விடுக்கின்றன.

ஆனால், மாநில அரசுகளின் கோரிக்கைகளை உடனடியாக பரிசீலித்து நிதி உதவிகளை அளிப்பதில் ஒன்றிய அரசு காலதாமதம் செய்யும் நடைமுறை சமீப காலமாக அதிகரித்து உள்ளது. ஆளும் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு விரைவாக நிதியுதவி அளிக்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பல நாட்கள் கழித்து தான் நிதி வருகிறது.

அப்படியே நிதி வழங்கினாலும் அது குறைவாக தான் உள்ளது. பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கீடு பிரச்னை தொடர்பாக தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த திருத்தத்தின்படி பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் மாநிலங்களின் பிரதிநிதிகளின் இடம் பெறுவார்கள். இதன் மூலம் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு சரியான முறையில் உரிய நிவாரண உதவிகள் கிடைக்க வழி ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

The post மாநிலங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் வகையில் பேரிடர் மேலாண்மை சட்டத்தில் திருத்தம் கோரி மசோதா தாக்கல்: திமுக எம்பி வில்சன் அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : DMK ,MP Wilson ,New Delhi ,B. Wilson ,Rajya Sabha ,National Disaster Management Authority ,Dinakaran ,
× RELATED பாராளுமன்ற தேர்தலில் சிறப்பாக...