×

மோடிக்கு ராகுல் வேண்டுகோள்

புதுடெல்லி: வயநாடு நிலச்சரிவு பாதிப்பை நேரில் பார்வையிட பிரதமர் மோடி இன்று கேரளா செல்கிறார். இதுபற்றி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பதிவில்,’வயநாடுக்கு நேரில் சென்று அந்த பயங்கர சோகத்தை நேரில் பார்வையிடுவதற்கு மோடிக்கு நன்றி. இது ஒரு நல்ல முடிவு. அங்கு நடந்த அழிவின் அளவை பிரதமர் நேரில் பார்த்தவுடன், அதை தேசிய பேரிடராக அறிவிப்பார் என்று நான் நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

The post மோடிக்கு ராகுல் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Rahul ,Modi ,New Delhi ,Kerala ,Wayanad ,Lok Sabha ,Opposition Leader ,Rahul Gandhi ,Dinakaran ,
× RELATED அரியானாவில் காங். சார்பில் போட்டி?...