×

போதைப்பொருள் தடுப்பு, சட்டம் ஒழுங்கு சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வு கூட்டம்: மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்தது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், போதை பொருட்கள் தடுப்பு குறித்து ஒருங்கிணைப்பு குழு ஆய்வுக் கூட்டம், காவல் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா.ஸ்ரீநிவாச பெருமாள், ஆவடி துணை காவல் கண்காணிப்பாளர் ஐமன் ஜமால், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், மாவட்ட அரசு வழக்கறிஞர் எஸ்.மூர்த்தி, மாவட்ட அரசு கூடுதல் வழக்கறிஞர் சி.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருவள்ளூர் மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட, ஆவடி ஆணையரக காவல் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் போக்சோ வழக்கில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் எண்ணிக்கை குறித்தும், தற்போதைய நிலைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், குழந்தை திருமணங்கள் குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. போதைப் பொருட்கள் தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதி மற்றும் ஆவடி ஆணையரக காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலைய பகுதிகளில் போதைப் பொருட்கள் தடுப்பு பிரிவுகளில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் எண்ணிக்கை மற்றும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் தற்போதைய நிலைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும், பள்ளி கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருட்களுக்கு எதிராக கடைப்பிடிக்கப்பட்ட விழிப்புணர்வு பிரச்சாரங்கள் குறித்தும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் காவல் துறையினர் ஆகியோர் இணைந்து கடைகளில் கூட்டாய்வு மேற்கொண்டு அதன் மூலம் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் எத்தனை கடைகளுக்கு உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது? தற்போதைய நிலைகள் குறித்தும், மேலும், போதைப் பொருட்களுக்கு பயன்படுத்திய வாகனங்களை கைப்பற்றப்பட்ட விவரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

சாலை பாதுகாப்பு தொடர்பாக நடைபெற்று ஆய்வுக் கூட்டத்தில் சாலை விபத்து மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுநர் மீது வழக்கு தொடரப்பட்ட விவரங்களும், ஓட்டுநரின் உரிமத்தை இடைநீக்கம் செய்யப்பட்ட விவரங்கள் குறித்தும், வாகனம் இயக்கும் பொழுது கைபேசியில் பேசிக்கொண்டு செல்பவர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கை மற்றும் தலைக்கவசம் இல்லாமல் வாகன ஓட்டுநர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் தற்போதைய நிலவரம் குறித்தும், அதிக எடை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் நிலவரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும் இன்னுயிர் காப்போம் திட்டத்தில் ஒருவர் சாலை விபத்து ஏற்பட்டால் தொலைதூரம் உள்ள அரசு மருத்துவமனையை தவிர்த்து அருகில் உள்ள இன்னுயிர் காப்போம் திட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என 108 ஆம்புலன்ஸ் வாகனம் ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். தொடர்ந்து மாவட்ட நுகர்வோர் அமைப்பு மற்றும் திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு சார்பாக, பராமரிக்கப்படாத வாகனங்களால் விபத்துக்கள் ஏற்பட உள்ளதால் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வேகத்தடை இருக்கும் இடங்களில் சமிக்ஞை பலகைகள் அமைத்து தர வேண்டும் போன்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் வைத்த கோரிக்கைகள் பரிசீலினை செய்து கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதில் பொன்னேரி சப் கலெக்டர் வாகே சங்கத் பல்வந்த், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெங்கட்ராமன், வருவாய் கோட்டாட்சியர்கள் திருவள்ளூர் கற்பகம், திருத்தணி தீபா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post போதைப்பொருள் தடுப்பு, சட்டம் ஒழுங்கு சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வு கூட்டம்: மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : District Collector ,Tiruvallur ,Thiruvallur District Collector ,
× RELATED மதுரையில் விடுதிகளை மீறிய கட்டடங்கள்...