×

பைக் மீது கண்டெய்னர் லாரி மோதி ஏசி மெக்கானிக் பரிதாப பலி

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே பைக் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் ஏசி மெக்கானிக் பரிதாபமாக பலியானார். சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்தவர் தினேஷ்பாபு(23), ஏசி மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவர், நேற்று தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ், வானகரம் அடுத்த ஓடமா நகர் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த கண்டெய்னர் லாரி பைக் மீது அதிவேகமாக மோதியது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த தினேஷ்பாபு, கண்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், தினேஷ்பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்திற்கு காரணமான கண்டெய்னர் லாரி டிரைவர் ராஜசேகர்(22), என்பவரை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பைக் மீது கண்டெய்னர் லாரி மோதி ஏசி மெக்கானிக் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Dinesh Babu ,Arumbakkam, Chennai ,Tambaram ,Maduravayal ,Bypass ,Vanakaram ,
× RELATED பூந்தமல்லி நகராட்சி சார்பில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு