பொன்னேரி: மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சி புதிய செயல் அலுவலர் நியமிக்கப்பட்டார். மீஞ்சூரில் செயல் அலுவலராக பணியாற்றி வந்த வெற்றிஅரசு கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம், புவனகிரி பேரூராட்சி செயல் அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலராக டி.மகேஸ்வரி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்பு உதகை மண்டலம் பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் பணியாற்றி உள்ளார். இதனை தொடர்ந்து, டி.மகேஸ்வரிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ், துணைத் தலைவர் அலெக்சாண்டர் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் பேரூராட்சி அனைத்து கவுன்சிலர்கள் தங்களை அறிமுகம் செய்துகொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
The post மீஞ்சூரில் சிறப்பு நிலை பேரூராட்சி புதிய செயல் அலுவலர் நியமனம் appeared first on Dinakaran.