சென்னை: நீதிமன்ற விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டவருக்கு சென்னை உயநீதிமன்றம் ரூ.50,000 அபராதம் விதித்து. குடிநீர் வழங்கல் துறையில் ஊழல் நடப்பதாகவும், அது பற்றி சிறப்பு புலனாய்வு விசாரணை கோரி கண்ணன் சுவாமிநாதன் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி பாலாஜி அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. குடிநீர் வழங்குவதற்கான டெண்டரை ஒன்றிய அரசின் ஜல் ஜீவன் வழிகாட்டுதல்கள்படி முறையாக வழங்கவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மனுதாரருக்கு டெண்டர் தரவில்லை என்பதால் தவறான குற்றச்சாட்டை முன்வைப்பதாக குடிநீர் வழங்கல் துறை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணையின்போது காணொலியில் ஆஜரான மனுதாரர், விசாரணையை நடத்த விடாமல் இடையூறு செய்து கூச்சலிட்ட நிலையில் அபராதம் விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
The post நீதிமன்ற விசாரணைக்கு இடையூறு: ரூ.50,000 அபராதம் விதித்து ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.