×

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

*சபா ராஜேந்திரன் எம்எல்ஏ வழங்கினார்

நெய்வேலி: நெய்வேலி இந்திரா நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் துவக்க விழா நடைபெற்றது. நெய்வேலி சபா ராஜேந்திரன் எம்எல்ஏ கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். இதில், குறிஞ்சிப்பாடி ஒன்றியம் இந்திரா நகர், கீழூர், வடக்கு மேலூர் ஆகிய ஊராட்சியில் உள்ள பொதுமக்களிடம் இருந்து பல்வேறு மனுக்கள் பெறப்பட்டு, இணையதளம் மூலம் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கப்பட்டது.தொடர்ந்து பொதுமக்களுக்கு மகளிர் உரிமை தொகை, முதியோர் உதவித்தொகை, கர்ப்பிணிகளுக்கு சுகாதார பெட்டகம், விவசாயிகளுக்கு தேவையான பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

சபா ராஜேந்திரன் எம்எல்ஏ தொடர் முயற்சியால், இந்திரா நகர் ஊராட்சி எம்ஆர்கே சாலையில் கடந்த 40 வருடங்களுக்கு முன் கூட்டுறவு சங்கம் சார்பில் உள்ள மனை பிரிவுகளுக்கு தனி உட்பிரிவு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு தனி பட்டா வழங்கப்பட்டது.குறிஞ்சிப்பாடி பிடிஓ ராமச்சந்திரன், வெங்கடேசன், டிஎஸ்ஓ ராஜீ, வட்டாட்சியர் அசோகன், திமுக நிர்வாகிகள் வீர ராமச்சந்திரன், ஆனந்த ஜோதி, ஏழுமலை, ராஜேஷ், கோபு, பினுக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜலட்சுமி கிருஷ்ணமூர்த்தி, ராமமூர்த்தி, ராஜேஸ்வரி காசிநாதன், துணை தலைவர் உமா ராமதாஸ், விஏஓ விசுவநாதன், ரவிச்சந்திரன், ஊராட்சி செயலாளர் கார்த்திகேயன், நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Tags : Sabha Rajendran ,MLA ,Neyveli ,Program ,Indira Nagar Government Higher Secondary School ,Kurinchipadi Union Indira ,Chief Minister Program Camp ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் மகளை கைது...