×

தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சென்னை: தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்; வங்கக்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள், 4 நாட்டுப் படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து அராஜக முறையில் சிறைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், ஒன்றிய பாஜக அரசு இதற்கான நிரந்தரத் தீர்வினை எட்ட போதிய முயற்சிகள் எடுக்காமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்தம் உடைமைகளையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுப்பதுடன், கச்சத்தீவு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து தேர்தல் நேரத்தில் மட்டும் பேசுவதோடு நில்லாமல், தமிழ்நாட்டின் மீனவர்களும் இந்தியர்கள் தான் என்பதை மனதிற்கொண்டு, இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்கள் படும் இன்னல்களுக்கெல்லாம் நிரந்தர தீர்வை எட்டுமாறு ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்துகிறேன். மேலும், தமிழக எம்.பி.க்கள் இப்பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்திலும் ஒன்றிய அரசிடமும் உரிய அழுத்தத்தை அளிக்குமாறும் வலியுறுத்தினார்.

The post தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Tamil Nadu ,Sri Lankan Navy ,Chennai ,AIADMK ,General Secretary ,Bay of Bengal ,Dinakaran ,
× RELATED மீனவர்கள் உண்ணாவிரதம் அதிமுக பங்கேற்பு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு