×

கோவில் திருவிழா சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் : ஐகோர்ட்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருவுடையார்பட்டியில் ஆடி திருவிழா சுமுகமாக நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுயம்பு சாத்த அய்யனார் கோயில் ஆடித் திருவிழாவில் அனைத்து தரப்பினரும் ஒற்றுமையாக பங்கேற்கவேண்டும் என்றும் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர், உரிய அதிகாரியை நியமித்து விழாவை கண்காணிக்க வேண்டும் என்றும் தலைக்கட்டு வரி வசூலில் எந்த பாரபட்சமும் இல்லாமல் அனைவரிடமும் வசூல் செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post கோவில் திருவிழா சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் : ஐகோர்ட் appeared first on Dinakaran.

Tags : ICourt ,Sivagangai ,Madras High Court ,Aadi festival ,Tiruvudayarpatti ,Hindu Charities Department ,Swayambu Satta Ayyanar Temple Aadith Festival ,
× RELATED கிண்டி ரேஸ் கிளப் கோரிக்கையை...