சென்னை: சுதந்திர தின ஒத்திகையை முன்னிட்டு சென்னையில் இன்று ராஜாஜி சாலை, கொடிமரச் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நாடு முழுவதும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு வரும் 15-ம் தேதி சென்னையில் கொண்டாடப்படவுள்ள சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்கான அணிவகுப்பு 5,9,13 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் 5ம் தேதிக்கான ஒத்திகை முடிந்த நிலையில் 9ம் தேதி ஒத்திகை இன்று காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை கீழ்க்கண்ட சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. அதே போல் வருகின்றன 13ம் தேதியும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், காமராஜர் சாலையில் இருந்து வாலாஜா சாலை, அண்ணா சாலை, வடக்கு கோட்டை சாலை வழியாக பாரிமுனை செல்ல வேண்டும். பாரிமுனையில் இருந்து பாரிஸ் கார்னர், முத்துசாமி பாலம், அண்ணா சாலை வழியாக காமராஜர் சாலை செல்லலாம். சிவப்பு, நீலம், பர்பிள், பிங்க் அட்டைகள் வைத்திருப்போர் தலைமைச் செயலகம் எதிரில் வாகனங்களை நிறுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனுமதி அட்டை இல்லாத வாகனங்களில் வருவோர் தீவுத்திடலில் வாகனங்களை நிறுத்தவேண்டும்.
The post சுதந்திர தின ஒத்திகை: சென்னையில் இன்று ராஜாஜி சாலை, கொடிமரச் சாலைகளில் போக்குவரத்து மாற்றம்..!! appeared first on Dinakaran.