வயநாடு : வயநாடு நிலச்சரிவால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில அளவிலான ஓணம் கொண்டாட்டங்களை ரத்து செய்தது கேரள அரசு. மக்கள் தங்கள் வீடுகளில் எளிமையான முறையில் ஓணம் பண்டிகையை கொண்டாடுமாறும், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுமாறும் கேரள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
The post வயநாடு நிலச்சரிவு எதிரொலி : ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து! appeared first on Dinakaran.