×

சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உள்நாட்டு விமான பயணிகள் ஒன்றரை மணி நேரமும், சர்வதேச விமான பயணிகள் மூன்றரை மணி நேரமும் முன்னதாகவும் வர வேண்டும். இன்று அதிகாலையில் இருந்து சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆக.20 நள்ளிரவு வரை 7 அடுக்கு பாதுகாப்பு அமலில் இருக்கும். பயணிகள் திரவப் பொருட்கள், ஜாம், அல்வா, ஊறுகாய் போன்ற பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கபப்ட்டுள்ளது.

The post சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Airport ,Chennai ,Independence Day ,
× RELATED சென்னை விமானநிலையத்தில் சிங்கப்பூர்...