×

சுதந்திர தின ஒத்திகை – போக்குவரத்து மாற்றம்

சென்னை: சுதந்திர தின ஒத்திகையை முன்னிட்டு சென்னையில் இன்று ராஜாஜி சாலை, கொடிமரச் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காமராஜர் சாலையில் இருந்து வாலாஜா சாலை, அண்ணா சாலை, வடக்கு கோட்டை சாலை வழியாக பாரிமுனை செல்ல வேண்டும். பாரிமுனையில் இருந்து பாரிஸ் கார்னர், முத்துசாமி பாலம், அண்ணா சாலை வழியாக காமராஜர் சாலை செல்லலாம். சிவப்பு, நீலம், பர்பிள், பிங்க் அட்டைகள் வைத்திருப்போர் தலைமைச் செயலகம் எதிரில் வாகனங்களை நிறுத்த அனுமதி; அனுமதி அட்டை இல்லாத வாகனங்களில் வருவோர் தீவுத்திடலில் வாகனங்களை நிறுத்தவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சுதந்திர தின ஒத்திகை – போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Independence Day ,Chennai ,Rajaji Road ,Kodimara Road ,Kamarajar Road ,Parimuna ,Walaja Road ,Anna Road ,North Fort Road ,Barimuna… ,Dinakaran ,
× RELATED நாடு முழுவதும் 78வது சுதந்திர தின கொண்டாட்டம்