×

திருச்சி கிராப்பட்டியில் குழந்தைகள் பாதுகாப்பு: விழிப்புணர்வு நிகழ்ச்சி

 

திருச்சி. ஆக.9: திருச்சி மாநகரம் கிராப்பட்டி தனியார் மேல்நிலைப் பள்ளியில் குழந்தை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் விஜித்தாள் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம், குழந்தை திருமண தடுப்புச் சட்டம் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் மற்றும் குழந்தைகளுக்கான இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் 1098 குறித்தும், ஐடிஎப்சி ஃபஸ்ட் பாரத் நிறுவனத்தின் முதுநிலை மேலாளர் சிவா கல்வியின் அவசியம் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு எழுதுகோல் பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் 900க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post திருச்சி கிராப்பட்டியில் குழந்தைகள் பாதுகாப்பு: விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Trichy ,Krapatti ,Karapatti Private Higher Secondary School ,headmaster ,Vijithal ,welfare ,Dr. ,Prabhu ,
× RELATED திருச்சி ஸ்ரீரங்கத்தில் கழிவறை...