×

கிருஷ்ணராயபுரம் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி

கிருஷ்ணராயபுரம், ஆக. 9: கிருஷ்ணராயபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி நடைபெற்றது. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம்,பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் என்பதை வலியுறுத்தி பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ரெத்தினம் தலைமை வகித்தார். சப்- இன்ஸ்பெக்டர்கள். ராஜேஸ்வரி (குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு), நந்தகுமார் (பசுபதிபாளையம் காவல் நிலையம்- போலீஸ் கராத்தே பயிற்சியாளர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். தற்காப்பு கலை பயிற்சியில் கராத்தே மாஸ்டர். சென்சாய் பாலு, சிலம்பு ஆசான் . கிருஷ்ணராஜ் ஆகியோர் மாணவிகளுக்கு கராத்தே மற்றும் சிலம்பு பயிற்சிகளை வழங்கினார். மேலும் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ராஜசேகர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post கிருஷ்ணராயபுரம் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Krishnarayapuram Government School ,Krishnarayapuram ,Krishnarayapuram Kings Secondary School ,Karur District Police ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணராயபுரம் அரசு மருத்துவமனையில் உலக தற்கொலை தடுப்பு தினம்