திருப்பூர், ஆக. 9: பரமக்குடி பகுதியை சேர்ந்த பரமேஸ்வரி (33), பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், இவரது வீடு பூட்டப்பட்ட நிலையில் வெகு நேரம் ஆகியும் வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து ஜன்னல் வழியே எட்டி பார்த்தனர். அப்போது, பரமேஸ்வரி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். இது குறித்து அப்பகுதியில் உள்ளவர்கள் 15 வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பரமேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post பெண் தற்கொலை appeared first on Dinakaran.