×

திருப்பூர் பேருந்து நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை

திருப்பூர், ஆக. 9: திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி சமீபத்தில் பொறுபேற்று கொண்டார். இதனைத்தொடர்ந்து, மாநகரில் குற்ற சம்பவங்களை தடுத்திடும் வகையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 3 தனிப்படை அமைத்து குற்றத்தடுப்பு சம்பவங்களில் தீவிரம் காட்டி வருகிறார். திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் செல்போன் திருட்டு, வழிப்பறி, பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளுதல், புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா கொண்டு வருதல் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவரிடம் புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி உத்தரவின் பேரில் போலீசார் நேற்று காலை திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகள் மற்றும் பேருந்து நிலையத்தில் தங்கி இருந்தவர்களின் உடைமைகளை திடீர் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து சந்தேகப்படும்படியாக பேருந்து நிலையத்தில் சுற்றி திறிந்தவர்களிடம் விசாரணை செய்து வெளியேற்றினர்.

The post திருப்பூர் பேருந்து நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை appeared first on Dinakaran.

Tags : Tirupur bus station ,Tirupur ,Municipal ,Police Commissioner ,Lakshmi ,Central Bus ,Dinakaran ,
× RELATED திருப்பூர் பஸ் நிலையத்தில் சுகாதார பணிகள் தீவிரம்