×

நீலகிரி எஸ்பியாக நிஷா நியமனம்

ஊட்டி,ஆக.9: நீலகிரி மாவட்டத்தின் 65 வது காவல் கண்காணிப்பாளராக ஐபிஎஸ் அதிகாரி என்.எஸ். நிஷா நியமிக்கப்பட்டு உள்ளார். விரைவில் அவர் பொறுப்பேற்க உள்ளார். நீலகிரி மாவட்ட எஸ்பியாக கடந்த ஆண்டு அக்ேடாபர் மாதம் முதல் சுந்தரவடிவேல் நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார். இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட எஸ்பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதில் கடந்த பத்து மாதங்களாக நீலகிரி மாவட்ட எஸ்பியாக இருந்த சுந்தரவடிவேல், சென்னை பெருநகர காவல்துறையில் பூக்கடை துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக சென்னை மத்திய குற்றபிரிவு-2 துணை ஆணையராக பணியாற்றி வந்த ஐபிஎஸ் அதிகாரி என்.எஸ். நிஷா நீலகிரி மாவட்டத்தின் புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்டார். இவர் விரைவில் நீலகிரி மாவட்ட எஸ்பியாக பொறுப்பேற்க உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

The post நீலகிரி எஸ்பியாக நிஷா நியமனம் appeared first on Dinakaran.

Tags : Nisha ,Nilgiris ,Ooty ,N.S. ,Superintendent of Police ,Nilgiri district ,Sundaravadivel ,Nilgiri SP ,Dinakaran ,
× RELATED காவலர்களின் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்ல வாகன சேவை