×

மாநகரில் மிதமான மழை

கோவை, ஆக. 9: கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக மாநகரில் மழை பெய்யாத நிலையில், ஊரக பகுதிகளில் மழை பெய்து வந்தது. மேலும், மாவட்டம் முழுவதும் வெயில் தாக்கம் இருந்தது. இந்நிலையில், கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

ஆனால், கோவை மாநகரில் காலையில் வெயில் சுட்டெரித்து வந்தது. பின்னர், திடீரென மதியத்திற்கு மேல் வானம் கருமேகங்களுடன் காணப்பட்டது. தொடர்ந்து, மாநகரில் துடியலூர், கவுண்டம்பாளையம், வடகோவை, கணபதி, காந்திபுரம், ராமநாதபுரம், குனியமுத்தூர், பீளமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. கவுண்டம்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் 20 நிமிடங்களுக்கு மேல் கனமழை பெய்தது. மேலும், மாநகரில் பெய்த மழையின் காரணமாக குளிர்ச்சியான காலநிலை நிலவியது. இந்நிலையில், மாவட்டத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக காலநிலை ஆராய்ச்சி மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மாநகரில் மிதமான மழை appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Tirupur ,Dinakaran ,
× RELATED ரோந்து செல்லும் போது துப்பாக்கி...