×

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர் பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு: ஐநா வலியுறுத்தல்

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் ஆன்டனியோ கட்டாரஸின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், காஷ்மீர் விவகாரத்தில் எங்களின் நிலைப்பாடு மாறாதது. ஐம்மு மற்றும் காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கிறது மற்றும் எப்போதும் இருக்கும் என்று பாகிஸ்தானிடம் இந்தியா பலமுறை கூறியுள்ளது. ஜம்மு காஷ்மீர் தொடர்பான பிரச்னையின் இறுதித்தீர்வானது ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின்படியும் மனித உரிமைகளுக்கு முழுமரியாதையுடனும் அமைதியான வழிகளில் எட்டப்பட வேண்டும்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே 1972ம் ஆண்டு இருதரப்பு உறவுகள் குறித்து சிம்லா ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் காஷ்மீர் விவகாரத்தில் எந்தவொரு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தையும் நிராகரிக்கிறது. மேலும் இருநாட்டுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அமைதியான வழிமுறைகள் மற்றும் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மூலமாக தீர்க்கப்படவும் ஒப்பந்தம் வலியுறுத்துகிறது என்றார்.

The post இந்தியா-பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர் பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு: ஐநா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Kashmir ,UN ,New York ,United Nations ,Antonio Guterres' ,IMMU ,Union Territories ,Ladakh ,Pakistan ,India ,Dinakaran ,
× RELATED ஐநா பொதுச் சபையில் மோடி உரை கிடையாது: உத்தேச பட்டியல் வெளியீடு