- ADGP
- சேலம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- டேவிட்சன் ஆசீர்வாட்
- சேலம் மாநகர போலீஸ் கமிஷனர்
- பெருநகர போலீஸ் கமிஷனர்
- பிரவீன்குமார் அபினாபு
- மதிவனன்
- பிருந்தா
- பெருநகர போலீஸ்
- தின மலர்
சேலம், ஆக.9: தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம் நேற்று சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு, துணை கமிஷனர்கள் மதிவாணன், பிருந்தா மற்றும் உதவி கமிஷனர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். குற்ற செயல்களை தடுக்க தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும், ரவுடிகள் பட்டியலை எடுத்து தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். இதில், போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்துகெண்டனர்.
The post மாநகர போலீசாருடன் ஏடிஜிபி ஆலோசனை appeared first on Dinakaran.