போளூர், ஆக.9: போளூர் சிறப்பு நிலை புதிய பேரூராட்சி செயலாளராக பா.கோமதி பொறுப்பேற்றார். இவர் சென்னை பேரூராட்சி இயக்க அலுவலகத்ததில் இருந்து பதவி உயர்வு பெற்று இந்த பொறுப்பை ஏற்றுள்ளார். இங்கு செயல் அலுவலராக பணியாற்றிய யூ.முகம்மத் ரிஸ்வான் உதகைமண்டல பேரூராட்சிகளின் இயக்குனராக பதவி உயர்வு பெற்று சென்றுள்ளார். அதனை தொடர்ந்து, போளூர் பேரூராட்சி உதவி பொறியாளராக எம்.அருண் பொறுப்பேற்றுள்ளார். புதிதாக பொறுப்பேற்றுள்ள செயல் அலுவலர் பா.கோமதியை பேரூராட்சி தலைவர் ச.ராணிசண்முகம், துணை தலைவர் ந.சாந்தி நடராஜன், முதுநிலை எழுத்தர் அ.முகம்மத்இஸ்ஹாக், மன்ற உறுப்பினர்கள் த.அமுதாதனசேககரன் உட்பட அனைவரும் வரவேற்றுவாழ்த்து தெரிவித்தனர்.
The post பேரூராட்சி செயல் அலுவலர் பொறுப்பேற்பு போளூர் சிறப்பு நிலை appeared first on Dinakaran.