10, +2 துணைத் தேர்வுகள் விடைத்தாள் நகல்களை இன்று பதிவிறக்கலாம்

சென்னை: 10-ம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான துணைத் தேர்வுகள் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடந்தன. இந்ததேர்வில் பங்கேற்ற மாணவ மாணவியரில் சிலர் விடைத்தாள் நகல்கள் கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் தங்களுக்கான விடைத்தாள் நகல்களை தேர்வுத் துறையின் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து இன்று மதியம் 2 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இதையடுத்து, மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டல் செய்ய விரும்புவோரில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் 12ம் தேதி மற்றும் 13ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். அதன்படி மறு மதிப்பீட்டுக்கு பாடம் ஒன்றுக்கு ரூ.505, மறு கூட்டல் செய்ய உயிரியல் பாடத்துக்கு ரூ.305, பிற பாடங்களுக்கு ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும். 10ம் வகுப்பு மாணவர்கள் மறு மதிப்பீடு செய்ய பாடம் ஒன்றுக்கு ரூ.505, மறு கூட்டல் செய்ய பாடம் ஒன்றுக்கு ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும். மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டல் செய்ய விரும்புவோர் மேற்கண்ட தேதிகளில் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு நேரில் சென்று கட்டணம் செலுத்தி பதிவு செய்யலாம்.

The post 10, +2 துணைத் தேர்வுகள் விடைத்தாள் நகல்களை இன்று பதிவிறக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: