×

தொழில்முனைவோருக்கு டெண்டர் வழிமுறை தொடர்பான பயிற்சி 13ம் தேதி நடக்கிறது

சென்னை: தொழில் முனைவோர் மேம்பாடு நிறுவனம் சார்பில் வரும் 13ம் தேதி தொழில் முனைவோருக்கான டெண்டர் வழிமுறை தொடர்பான பயிற்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில் உள்ள தொழில் முனைவோர் மேம்பாட்டு வளாகத்தில் தொழில்முனைவோருக்கான டெண்டர் வழிமுறைகள் தொடர்பான பயிற்சி வரும் 13ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது. பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் http://www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை சென்னை, ஈக்காட்டுத்தாங்கல் இடிஐஐ அலுவலக சாலை, சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மற்றும் 9677152265, 7010143022, 9841336033 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். முன்பதிவு அவசியம்.

The post தொழில்முனைவோருக்கு டெண்டர் வழிமுறை தொடர்பான பயிற்சி 13ம் தேதி நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Entrepreneurship Development Agency ,Tamil Nadu Government's Entrepreneurship Development and Innovation Institute ,
× RELATED சென்னை எம்.ஐ.டி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்!!