ஈரோடு, ஆக. 9: ஈரோட்டில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்த மளிகை கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு கிருஷ்ணம்பாளையம் சிந்தன் நகர் 4வது வீதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து கருங்கல்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக செயல்பட்ட மளிகை கடையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போடு கடையிலும், கடைக்கு அருகில் உள்ள ஒரு வீட்டிலும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை விற்பனைக்காக பண்டல், பண்டலாக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடையின் உரிமையாளரான ஈரோடு கிருஷ்ணம்பாளையம் சிந்தன் நகர் 4வது வீதியை சேர்ந்த முகமது பாரூக் மகன் சாகுல் அமீது (34) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 87 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள், ஒரு பயணிகள் ஆட்டோ, ஒரு ஸ்கூட்டர், ஸ்மார்ட் போன் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.
The post புகையிலை பதுக்கி விற்ற மளிகை கடைக்காரர் கைது appeared first on Dinakaran.