கல்வியோடு சமூக சேவையிலும் அசத்திய‌ தமிழ் மாணவர் ஆதித்யாவுக்கு ஷார்ஜா அரசு விருது

துபாய் : துபாய் அல் வர்கா பகுதியில் அவர் ஓன் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வரும் தமிழ் மாணவ சிறுவன் ஆதித்யா சர்மா இவர் கல்வி மற்றும் சுற்றுசூழல் மேம்பாடு மற்றும் பல்வேறு சமூக சேவைகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக சார்ஜா அரசின் சார்பில் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

ஷார்ஜா கவுன்சில் சார்பில் சார்ஜா பல்கலைகழக அரங்கத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஷார்ஜா பட்டத்து இளவரசரும், துணை ஆட்சியாளருமான மேதகு சேக் சுல்தான் பின் முகம்மது பின் சுல்தான் அல் காசிம் பங்கேற்று மாணவர் ஆதித்யா சர்மாவுக்கு விருது வழங்கினார்.

இம்மாணவ சிறுவனின் தந்தை மதுரையை சேர்ந்தவர் தாயார் புதுச்சேரியை சேர்ந்தவராவார்கள் மாணவரின் தந்தை ஸ்ரீராம் ஷர்மா மற்றும் தாயார் ஹேமா  கூறியதாவது..

விருது பெற்றது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. எங்களது மகனின் அர்பணிப்புக்கும் உழைப்பிற்கும் கிடைத்த விருதாகும்.இதற்காக உற்சாகமளித்த பள்ளி நிர்வாகத்தினர் ,நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றி என்றனர்.

Related Stories: