×

ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பொறுப்பேற்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பொறுப்பேற்றுக் கொண்டார். திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மற்றும் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பணியாற்றி வந்த என்.ஓ.சுகபுத்ரா, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக இருந்த வை.ஜெயகுமார் திருவள்ளூர் மாவட்ட திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து, நேற்று வை.ஜெயக்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் அவருக்கு ஊரக வளர்ச்சி முகமை அலுவலர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

The post ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Tags : Rural Development Agency ,Tiruvallur ,Thiruvallur District Rural Development Agency ,Sukhaputra ,Tiruvallur District Rural Development Agency ,Tirunelveli Corporation ,Dinakaran ,
× RELATED மக்கள்குறைதீர் கூட்டத்தில் .50 லட்சம்...